நல்லதாகச் சாப்பிட்டால்தான் நீரழிவு வராது!

நம் உணவின் மாவுச் சத்து (carbohydrates) செரித்து குளுக்கோஸாக மாறுகிறது. நம் உணவின் புரதச் சத்து (protein) அமினோ அமிலங்களாக மாறுகின்றன. நம் உணவின் கொழுப்புச் சத்துக்கள் (Fats and oils) கொழுப்பி அமிலங்களாக உருமாறுகின்றன. 

செரிமானம் மூலம் கிடைத்த குளுக்குகொஸ் நம் உடல் உழைப்பிற்கு தேவைப்படும் சக்தியாக்கம் போக மீதமாக உள்ள யாவையும் அசடைல்கோ-ஏ என்ற உயிரியல் வேதியாக மாற்றமடைகிறது. அதுபோலவே அமினோ அமிலங்கள் உடல் கட்டுமானம் மற்றும் நொதிகள் மற்றும் ஹார்மோன் உற்பத்திக்குப் போக மீதமுள்ளவை யாவையும் அசடைல்கோ-ஏ வாக மாறுகின்றன. அதுபோலவே உடல் பாதுகாப்பிற்கு பயன்படுத்தியது போக மீதமுள்ள கொழுப்பு அமிலங்கள் யாவையும் அசடைல்கோ-ஏ வாக மாறுகின்றன. 

பின்னர் அசடைல்கோ -ஏ வானது இன்னமும் உடலுக்குத் தேவையான சக்தியாக்கத்திற்கு பயன்பட்ட பின்னர் மீதமுள்ள அனைத்தும் கொழுப்பாக உடலில் சேமிக்கப்படுகிறது. இப்படித்தான் கல்லிரலில் கிளைக்கோப்புரோட்டீனாகவும், மற்ற உடல் பகுதிகளில் லிப்போப்ப்புரோட்டீனாகவும் சேமிக்கப்படுகிறது. 

ஆக நாம் இங்கு கவனிக்க வேண்டியது என்னவென்றால், நாம் நல்ல உணவாக சாப்பிட்டால் உடல் சக்திபெற்றும் நல்ல கொழுப்பாகவும் சேமிக்கப்படும். அதுவே உணவு தரமற்றதாக இருப்பின் உணவின் மூலம் சக்தி கிடைக்காது, ஆனால், கெட்ட கொழுப்பாக உடலில் சேமிக்கப்படும். 

இது புரிந்தால் போதும். நம் நல்லதாக மட்டுமே சாப்பிட வேண்டும். இல்லையேல் நீரழிவு உள்ளிட்ட வாழ்நாள் நோய்கள் நம்மை வந்தடையும்.

நீரழிவு நோயாளிகளுக்கான உணவு அட்டவணை.

               
சாப்பிடக் கூடாதுஅளவோடு சாப்பிடலாம் அளவில்லாமல் சாப்பிடலாம்
சர்க்கரை கம்பு பாகற்காய்
கரும்பு ஓட்ஸ் சுரைக்காய்
சாக்லெட் அரிசி வாழைத்தண்டு
குளுக்கோஸ். அவல். வெள்ளை முள்ளங்கி.
காம்பளான் இரவை தக்காளி.
குளிர் பானங்கள். பார்லி அரிசி கொத்தவரங்காய்.
சாம் வகைகள் சோளம் காராமணி
பால் கட்டி மக்காச் சோளம் வெள்ளரிக்காய்
திரட்டுப்பால் கேழ்வரகு அவரைக்காய்
பனிக்கூழ். கேழ்வரகு முருங்கைக்காய்.
வாழைப்பழம் கோதுமை கீரை
பலாப்பழம் பாதாம் பருப்பு கண்டங்கத்திரி
மாம்பழம் முந்திரிப் பருப்பு கோவைக்காய்
நுங்கு. வேர்க்கடலை வெங்காயம்
சப்போட்டா. பிஸ்தா பருப்பு பூசணிக்காய்
சீதாப்பழம் வால் நட் கத்திரிக்காய்
உலர்ந்த திராட்சை வாழைப்பூ
சேப்பங்கிழங்கு பீர்க்கங்காய்.
உருளைக்கிழங்கு. பப்பாளிக்காய்.
சர்க்கரைவள்ளிக்கிழங்கு. வெண்டைக்காய்.
முட்டைக்கோஸ்.
நூல்கோல்
கோவிப்பூ
சீமை கத்திரிக்காய்